உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai
உள்ளங்கையிலே என்னை
வரைந்து கொண்டீரே
வெறும் மண்ணான என்னை
தேடி வந்தீரே
என் தூசி நீங்க தட்டி
என் காயம் எல்லாம் கட்டி
உங்க அன்பின் கரத்தினால்
என்னை கட்டி அணைத்தீரே
இயேசுவே உங்க முகத்தை பார்த்து
இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து
இயேசுவே உங்க தோளில் ஏறி
உரிமையாய் பேசுவேன் – 2
1.நீர் சொன்ன வார்த்தைகள்
ஒன்றுமே மாறாது
காலதாமதம் என்றாலும்
கலங்கி நான் போவேனோ
2.எனக்கொரு பந்தியை
தருவேன் என்றிரே
லாபம், நஷ்டமோ என்றாலும்
பின்தொடர்வேனே நான்
3.தாய் என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பேனோ
உறவுகள் வெறுத்தாலும்
உமதன்புக்கு இணையில்லயே
- வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele
- மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar
- தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom
- என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai
- கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae
இயேசுவே உங்க முகத்தை பார்த்து | Yesuve Unga Mugathai Paarthu