நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2
ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திரு நாள்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்
சொல்லி முடியாத எண்ணிலடங்காத
நன்மைகள் பலவும் செய்தார்
தேவன் கண்ணின் மணிபோல
துன்பம் தொடராது
நம்மை இதுவரை காத்தார்
நம்மை இனிமேலும் காப்பார்
ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்
தேவன் கரத்தில் நம்மையே
அளித்து உண்மையாய்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
மனதில் அவரையே வாழ்த்துவோம்