விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே – 2
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே – 2
1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்
2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சோல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே (2)
1. கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர் – இன்று
இன்று உன் பசி ஆற்றிடாரோ – கலங்காதே
2. பெரும் நோய்தனி் கலங்கிடாதே
பாசத்தால் உன்னை சோதிப்பாரே
திமிர் வாதத்தால் அசைவற்றவன் – தேவ
தயவினால் நடக்கலையோ – கலங்காதே
3. தந்தை தாய் உன்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் உன்னை – சொந்த
கரங்களால் அணைத்துக் கொள்வார் – கலங்காதே
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics