Ennai Undakkina En Devathi Devan lyrics

என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர்

தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2)

1.என்மேல் அவர் கண்ணைவைத்து

ஆலோசனை சொல்லுவார்

சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்

பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்

பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே

2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்

பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்

ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும்

கேடகமும் துருகமும் பெலன் அவரே

3.ஆவியான தேவனுக்கு

ரூபம் ஒன்றும் இல்லையே

ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே

வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே

வார்த்தையினால் பேசுகின்ற தேவன் இவரே

Leave a Comment

)?$/gm,"$1")],{type:"text/javascript"}))}catch(e){d="data:text/javascript;base64,"+btoa(t.replace(/^(?:)?$/gm,"$1"))}return d}-->