Paamalaigal

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச […]

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம் காணோமே, அரசின் செல்வம் யாதுமே. 3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும் ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர் புல்லணை கந்தை போர்த்தினீர். 4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின் மா தேசு விண் மண் தேக்கவே,

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம்

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே மாடு தங்கும் கொட்டில் போதுமே. 3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு மாதா பால் புல் தாவும் போதுமானது கேரூபின் சேராபின் தாழும் அவர்க்கே தொழும் ஆடுமாடும் போதுமே.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

1.திவ்விய பாலன் பிறந்தீரே கன்னி மாதா மைந்தன் நீர் ஏழைக் கோலம் எடுத்தீரே சர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை துறந்தீர் திவ்விய பாலா, தாழ்மையாக மண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க, செங்கோல் தாங்கும் அரசே! பூமியெங்கும் ஆள்க, ஆள்க, சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம் நித்திய காலமுள்ளது சர்வலோக அதிகாரம் என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடு ஏக

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

Oh Bethehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே

1. ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்; மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில், விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்

Oh Bethehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம், தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்;

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் 1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே, ஜெயித்தடைந்தீர் வெற்றியை நீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே,

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »