உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin

உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

https://www.youtube.com/watch?v=e-tIxOP4oL8

Leave a Comment