கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae

வாலிபர் மூவர் கீதம் (Benedicite)

1.கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

2.கர்த்தருடைய தூதர்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

3.வானங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்; ஆகாய விரிவின் மேலுள்ள ஜலங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்.

4.கர்த்தருடைய சகல வல்லமைகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: சூரிய சந்திரரே, கர்த்தரைப் போற்றுங்கள்.

5.வானத்தின் நட்சத்திரங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: மழையே, பனியே, கர்த்தரைப் போற்றுங்கள்.

6.தேவனுடைய காற்றுகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: அக்கினியே, உஷ்ணமே கர்த்தரைப் போற்றுங்கள்.

7.மாரிகாலமே. கோடைகாலமே, கர்த்தரைப் போற்றுங்கள்: மூடுபனியே. பெருங்காற்றே கர்த்தரைப் போற்றுங்கள்.

8.பனிக்கட்டியே, குளிரே, கர்த்தரைப் போற்றுங்கள்: உறைந்த நீரே, உறைந்த மழையே கர்த்தரைப் போற்றுங்கள்.

9.இரவே, பகலே, கர்த்தரைப் போற்றுங்கள்: ஒளியே, இருளே, கர்த்தரைப் போற்றுங்கள்.
போற்றுங்கள்.

10.மின்னல்களே, மேகங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

11.பூமியானது கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதிக்கக்கடவது.

12.மலைகளே, குன்றுகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: பூமியில் முளைத்தெழும்பும் எல்லாத் தாவரங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்.

13.நீரூற்றுகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: சமுத்திரங்களே, நதிகளே, கர்த்தரைப் போற்றுங்கள்.

14.மகா மச்சங்களே, நீர்வாழும் சகல ஜெந்துக்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: ஆகாயத்துச் சகல பறவைகளே, கர்த்தரைப் போற்றுங்கள்.

15.காட்டு மிருகங்களே, நாட்டு மிருகங்களே, கர்த்தரைப் போற்றுங்கள் மனுமக்களே, கர்த்தரைப் போற்றுங்கள்.

16.இஸ்ரவேலர் கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து: என்றென்றைக்கும் அவரைத் துதிக்கக்கடவர்கள்.

17.கர்த்தருடைய ஆசாரியர்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தருடைய ஊழியக்காரரே, கர்த்தரைப் போற்றுங்கள்.

18.நீதிமான்களின் ஆவிகளே, ஆத்துமாக்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: பரிசுத்தமும் தாழ்மையுள்ள இருதயமுடைய மனிதர்களே, கர்த்தரைப் போற்றுங்கள்.

19.அனனியாவே, அசரியாவே, மிகாவேலே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

20.பிதாவையும், குமாரனையும், பரிசுத்த ஆவியையும் போற்றுவோம்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதிப்போம்.

21.பரலோகத்தின் ஆகாய விரிவிலுள்ள கடவுளே, நீர் துதிக்கப்படத்தக்கவர்: என்றென்றைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகத் துதிக்கப்படுவீராக.

தானியேல் 3:23… (தள்ளுபடி ஆகமம்)

Karthar Shirustiththa Sagala Shirustigalae song lyrics in english

Karthar Shirustiththa Sagala Shirustigalae