என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil

என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil

என்னை அழைத்தவரே
கருவில் பிரித்தெடுத்தீர்
உம் அன்பை நான் மறப்பேனோ?
ஜீவனுள்ள நாளெல்லாம்
உம் கிருபையை பாடியே
உமக்காக என்றும் ஜீவிப்பேன்-2-என்னை

1.இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன்
பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர்
சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன்
உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன்
இயேசுவின் இரத்தம் என் பாவத்தைக்கழுவ
கல்வாரி அன்பென்னை நிரப்பினதே-2-என்னை

2.வாலிப நாட்களில் முன்குறித்தீரே
விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர்
ஆத்தும பாரம் இதயத்தை உடைக்க
அழைப்பின் நோக்கத்தை புரிய வைத்தீர்
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீர்
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டீர்-2-என்னை

3.பயனுள்ள பாத்திரமாய் மாற்றிட என்னை
உடைத்து உமக்காக உருவாக்கினீர்
கண்ணீரின் பாதையில் பெலத்தால் இடைகட்டி
மகிழ்வுடன் உம்மை துதிக்க வைத்தீர்
தேவரீர் என்னை இதுவரைக்கும்
கொண்டுவர நான் எம்மாத்திரம்?-2-என்னை

Ennai Azhaithavare Karuvil song lyrics in english

Ennai Azhaithavare
Karuvil Pirithedutheer
Um Anbai Nan Marappeno!
Jeevanulla Nalellam
Um Kirubaiyai Padiye
Umakkaka Enrum Jeevippaen-2-Ennai

1. Ratchippai Ariyamal Paavathil Vaazhndhen
Parisutha Devan Ennai Thedi Vantheer
Um Sithathai Ariyaamal Suyathinil Mithanten
Um Anbin Kural Kettu Tatham Seithaen
Yesuvin Ratham En Pavathai Kazhuva
Kalvaari Anbennai Nirappinathae-2-Ennai

2. Valiba Natkalil Munkuritheerae
Viduthalai Thanthennai Abishegitheer
Athuma Baram Idhayathai Udaika
Azhaippin Nokathai Puriya Vaitheer
Aanaathi Snekathaal Ennai Nesitheer
Kaaruṇyathaal Ennai Izhuthukkondir-2-Ennai

3. Payanulla Pathiramaai Maatrida Ennai
Udaithu Umakkaga Uruvakkinir
Kannerin Paathayil Um Belathaal Idaikkatti
Makizhvudan Ummai Tudhikka Seitheer
Dhevarir Ennai Ithuvaraikkum
Konduvara Nan Emmathiram?-Ennai