Lyrics:
தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே 
தூயவர் தோன்றினாரே 
அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவே
அற்புதர் பிறந்திட்டாரே
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே 
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே 
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளினில் உள்ள மனிதர்களை 
ஒளிக்குள் நடத்தி சென்றிடவே
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை 
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை 
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
வாடிடும் எளிய வறியவரை 
வாழ வைத்து உயர்த்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம் 
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

