மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – மான்
2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் – மான்
3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் – மான்
4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு என்தன்
வாயிலிருக்கிறதே – மான்
5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? – மான்
மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu