தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom
திருச்சபையின் கீதம் (Te Deum Laudamus)
1.தேவனே உம்மைத் துதிக்கிறோம்: உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம்.
2.நித்திய பிதாவாகிய உம்மை: பூமண்டலமெல்லாம் வணங்கும்.
3.தேவதூதர் அனைவோரும்; பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்;
4.கேரூபின்களும் சேராபின்களும்: தேவரீரை ஓயாமல் புகழ்ந்து போற்றி,
5.சேனைகளின் தேவனாகிய கர்த்தரே: நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்;வானமும் பூமியும் உமது மகிமையுள்ள மகத்துவத்தால் நிறைந்தன என்று முழங்குகிறார்கள்.
6அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம்: உம்மைப் போற்றும்: தீர்க்கதரிசிகளாகிய சிறப்புள்ள சங்கம் உம்மைப் போற்றும்.
7.இரத்தச்சாட்சிகளாகிய தைரிய சேனை உம்மைப் போற்றும்.
8 அளவில்லாத மகத்துவமுள்ள பிதாவாகிய தேவரீரையும், வணங்கப்படத்தக்க மெய்யான உம்முடைய ஒரே குமாரனையும்: தேற்றரவாளனான பரிசுத்த ஆவியையும்,
9.உலகமெங்குமுள்ள பரிசுத்த சபை: பிரஸ்தாபப்படுத்தும்.
10.கிறிஸ்துவே, தேவரீர் மகிமையின் ராஜா: நீரே பிதாவினுடைய நித்திய சுதன்,
11.நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்டபொழுது: கன்னியாஸ்திரீயின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை.
12.நீர் மரணத்தின் கொடுமையை வென்ற: விசுவாசிகள் எல்லாருக்கும் மோட்ச இராஜ்யத்தைத் திறந்தீர்.
13.நீர் பிதாவின் மகிமையிலே: தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறீர்.
14.நீர் எங்களுக்கு நியாயாதிபதியாக: வருவீரென்று விசுவாசிக்கிறோம்.
15.உமது விலையுயர்ந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட உமது அடியாருக்குச் சகாயஞ்செய்ய உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்: எங்களை நித்திய மகிமையிலே உம்முடைய பரிசுத்தவான்களோடே சேர்த்துக்கொள்ளும்.
16.கர்த்தாவே, உமது ஜனத்தை இரட்சித்து உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்: அவர்களை ஆண்டுகொண்டு என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
17.தினம் தினம் உம்மைத் தோத்திரிக்கிறோம்: எப்பொகுதும் சதாகாலங்களிலும் உமது நாமத்தை வணங்குகிறோம்.
18.ஆண்டவரே, இந்நாளில் பாவஞ்செய்யாதபடி: எங்களைக் காத்தருளும்: கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், எங்களுக்கு இரங்கும்.
19.கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறதால்: உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக: கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் கலங்காதபடி செய்யும்.
Devanae Ummai Thuthikirom song lyrics in english
Devanae Ummai Thuthikirom