Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன்
அன்போடு அழைக்கின்ற தேவன்
உன்னை ஒருபோது மறவாத நாதன்
கண்ணீரைத் துடைக்கின்ற தேவன்
உன் கவலையை மாற்றிடும் ராஜன் அன்போடு அழைக்கின்ற தேவன்…….
- காலங்கள் ஒவ்வொன்றும் மாறும்
 உம் அன்பு தான் என்றும் மாறாதது
 உயிர் வாழும் காலம் உம்மோடு வாழ
 கிருபையை தாருமையா
- பணமோ பொருளோ உன்னை
 ஒருபோதும் விடுவிக்க முடியாதது
 இயேசுவின் அன்பைத் தேடி நீ வந்தால்
 உன் நம்பிக்கை வீண் போகாது
- பாவத்தை போக்கிடும் இரத்தம்
 என் வாழ்வை முற்றிலும் மாற்றினதே
 என்னைத் தேடி வந்தீர் மனமகிழ்ச்சி தந்தீர்
 மனமிறங்கும் தெய்வம் ஐயா

