Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை
உன்னத அனுபவத்தில் என்னை
அழைத்து சென்றிடுவீர்
தேவனே என் இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
- கருவில் என்னை தெரிந்து கொண்டு முன் குறித்தீரே – இரத்தத்தினாலே நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே கர்த்தாவே
 உந்தன் கிருபைகளாலே என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
 கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
 நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்
- மூன்றாம் வானம் வரையில் என்னை எடுத்துச் சென்றிடுவீர்
 தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசி ஆராதிக்கச் செய்திடுவீர்
 கேருபீன்கள் சேராபீன்கள் பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
 அவர்களோடு நானும் சேர்ந்து ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
- ஆபிரகாமை அழைத்து அவரை ஆசீர்வதித்தவரே
 ரெகோபோத்தாக ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
 யாக்கோபை ஆசீர்வதித்தது போல என்னையும் ஆசீர்வதித்திடுவீர் யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
 என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்
Bro.சுந்தர ராஜன் (கோவை)
R-Pop Ballad T-100 B 4/4

