ஆவலோடே காத்திருக்கிறேன் 
ஆவியானவரே வந்திறங்குமே 
திருப்பாதம் வந்து நிற்கிறேன் 
ஆவியானவரே வந்திறங்குமே
(1)
பலிபீடத்தண்டையில் நான் 
பயத்தோடே வந்து நிற்கிறேன் 
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்
பாவக் கறைகள் கழுவிடுமே
(2)
இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் 
வருவேன் என்று வாக்குரைத்தீரே
உம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம்
வந்து ஆசீர்வதித்திடுமே
(3)
வெறுங்கையாய் அனுப்பாதிரும் 
இரட்டிப்பான நன்மையைத் தாரும்
வாஞ்சையோடு வந்த உள்ளங்களை 
இன்று திருப்தியாக்கிடுமே.

