உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku
ஜே ஜே – Jay Jay

உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே
பாசமாய் வந்தவர்
சாத்தானை வென்றவர்
புது வாழ்வை எனக்கு தந்தாரே
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே

தீராத என் நோய்கள் தீர்க்கவே
ஆறாத காயங்கள் பட்டாரே
வியாதியின் வேதனை இல்லையே
சுகமானேன் அவர் தழும்புகளாலே
பாசமாய் வந்தவர்
சாத்தானை வென்றவர்
புது வாழ்வை எனக்கு தந்தாரே
எல்லா நாவுகளும் பாடட்டும்
முழங்காலும் முடங்கட்டும்
நம் இயேசு ஜீவிக்கிறாரே
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே

சாபத்தில் இருந்த என்னை மீட்கவே
சாத்தானை சிலுவையிலே வென்றாரே
அடிமைதனங்களெல்லாம் முறிந்ததே
சுதந்திரமே இயேசு கிறிஸ்துவினாலே – பாசமாய்

தலைக்கு மேல கை தட்டி
தலை வணங்கி கை கூப்பி
என் இயேசு ராஜாவுக்கு ஜே ஜே

அன்பிற்காக ஏங்கி நின்ற என்னையே
அன்பின் கரங்களால் சேர்த்து கொண்டாரே
உலகத்தின் மோகம் குறையுதே
சிலுவையின் மேன்மை பெருகுதே – பாசமாய்

 

Leave a Comment