Aarathanikkuvanthavarae Ganam Magimai song lyrics – ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமை

Aarathanikkuvanthavarae Ganam Magimai song lyrics – ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமை

ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமைக்கெல்லாம் பாத்திரரே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம் உந்தன் அன்பினால் எங்கள் உள்ளம் நிறைந்து – நன்றி நிறைவால் பொங்கி வழிகின்றேதே -2

  1. நீதியறியாத எங்களை உந்தன் நீதியாக்கிட பாவமறியாத இயேசுவை நீர் பாவமாக்கினீரே நீதியின் உணர்வினால் உம்மிடம் நெருங்கிட நன்மைகள் அடைந்திட திராணியை தந்தீரே
  2. இயேசுவின் நாமம் எங்களுடைய அதிகார பத்திரம் உரிமையோடே உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம் இயேசுவின் நாமத்தில் அனைத்தையும் தந்தீரே தந்தை உம் அன்பினை எண்ணியே தொழுகிறோம்.
  3. பிதாவே உந்தன் சுதந்தரராய் இயேசுவை வைத்தீரே எங்களை உடன் சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே எங்களின் சுதந்தரம் அனைத்தையும் அறிந்திட வார்த்தையை நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்

pas. ரவி ராபர்ட் (சென்னை)
R-Disco T-120 Cm 2/4