Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன்

Anbodu Alaikintra devan song lyrics – அன்போடு அழைக்கின்ற தேவன்

அன்போடு அழைக்கின்ற தேவன்
உன்னை ஒருபோது மறவாத நாதன்
கண்ணீரைத் துடைக்கின்ற தேவன்
உன் கவலையை மாற்றிடும் ராஜன் அன்போடு அழைக்கின்ற தேவன்…….

  1. காலங்கள் ஒவ்வொன்றும் மாறும்
    உம் அன்பு தான் என்றும் மாறாதது
    உயிர் வாழும் காலம் உம்மோடு வாழ
    கிருபையை தாருமையா
  2. பணமோ பொருளோ உன்னை
    ஒருபோதும் விடுவிக்க முடியாதது
    இயேசுவின் அன்பைத் தேடி நீ வந்தால்
    உன் நம்பிக்கை வீண் போகாது
  3. பாவத்தை போக்கிடும் இரத்தம்
    என் வாழ்வை முற்றிலும் மாற்றினதே
    என்னைத் தேடி வந்தீர் மனமகிழ்ச்சி தந்தீர்
    மனமிறங்கும் தெய்வம் ஐயா