அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன்
வானில் தோன்றும் நாள்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள்
யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே

3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்
அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

4.புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்ய காலம் நாமுமங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றென்றுமே

5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலகர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்

Andha Naal Inba Inba Inba Naal
Vindhai Yesu Rajan Vaanil Thondrum Naal
Alleluya..Alleluya…Alleluya

1. Indha Boomi Vendhurugi Saambalaagumae
Sindhiththu Mananthirumbi Avarai Andikkol
Viraivudan Odivaa Vinninil Seravae
Vegamaai Vegamaai Vegamaai – Andha

2. Kastam Nastam Patta Paadum
Marandhu Pogumae
Panjam Pasi Dhaagamumae Maraindhu Pogumae
Vaadhai Noi Thubamum Varuththangal Yaavumae
Neengumae Neengumae Neengumae

3. Jeyankonda Suththar Ellaam Yegakkoottamaai
Yesuvodu Nindru Miga Yuththam Seiguvaar
Vedhaalam Paadhaalam Boodhangal Yaavumae
Azhippaar Azhippaar Azhippaar – Andha

4. Aattukkutti Pinnae Povaar Paattuppaaduvaar
Paravasangal Soolndhu Miga Magilndhu Poorippaar
Aandham Endrumae
Aarpparippom Avaraiyae
Aandham Aanandham Aanandham – Andha

5. Pudhiya Vaanam Pudhiya Boomi
Thondrum Naalilae
Niththiya Kaalam Naamum
Angae Vaazhvom Endrumae
Thoodhargal Yaavarum Sevaigal Purivaarae
Endrumae Endrumae Endrumae – Andha

Leave a Comment