Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே-2

பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்-2

1.பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்-2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி

2.மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி

Leave a Comment