என்மேல் நினைவானவர்-En Mael Ninaivaanavar

என்மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என்மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அனைப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் (2)

சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என் இயேசுவே(3)
இம்மானுவேல் நீரே

Leave a Comment