என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்

சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்