Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன்
என்ன சொல்லி நன்றி சொல்வேன் என் தேவனே
நீர் செய்த நன்மைகளோ ஏராளமே
சோதனையில் மாட்டிக்கொண்டேன்
வேதனையில் படுத்திருந்தேன்
கண்ணீரில் தலையணையை தினம் தினம் நனைத்து வந்தேன்
ஆறுதல் நீங்க தந்தீரே
கண்ணீரை நீர் துடைத்தீரே
குப்பையில் நான் கிடந்தேன்
பாவத்தில் சிக்கி தவித்தேன்
மீளவே முடியாமல் மாட்டிக்கொண்டு நான் தவித்தேன்
எனக்காய் இரத்தம் விட்டீரே
அதனால் கழுவப்பட்டேனே
வெட்கத்தால் மூடப்பட்டேன்
அவமானம் அடைந்தேன்
கூனி குறுகி நின்று உம்மை நோக்கி கூப்பிட்டேன்
என் தலை நிமிர செய்தீரே
ஊர் முன்பு உயர்த்தி வைத்தீரே