Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர்
இதுவரை தாங்கினீர்
இதுவரை சுமந்தீர்
இதுவரை சகம் தந்தீர்
நன்றி ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
கண்மணிப்போல் பாதுகாத்தீர் நன்றி ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
கைவிடாமல் பாதுகாத்தீர் நன்றி ராஜா
1.வியாதியின் வேதனையால் சோர்ந்த போது
பெலத்தின் மேல் பெலன் தந்து பாதுகாத்தீரே
கண்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே
கரம் பிடித்து என்னை பாதுகாத்தீரே – நன்றி ராஜா இயேசு ராஜா
2.நான் நம்பும் மனிதரெல்லாம் கைவிட்ட போதும்
என்னை மறவாத தேவன் பாதுகாத்தீரே
அழைத்தவர் என்றும் உண்மை உள்ளவர்
அழிந்து போகாமல் பாதுகாத்திரே – நன்றிராஜா இயேசுராஜா நன்றி ராஜா