Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர்
காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்…
வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்…
என்றும் மாறிடாத நம் தேவனை போற்றி நாம் துதிப்போம்…
யாரையும் தள்ளாத இயேசுவை வாழ்த்தி பாடுவோம்…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2
1.(தடுமாறும் பிள்ளையை கண்டால் தகப்பன் தவிப்பாரே…
உளமார வேண்டியே அழைத்தால், உடனே அவர் வருவாரே…) x 2
மனதுருகும் ஒரு தகப்பன் நமதருகே என்றும் உண்டு…
கரங்கள் தட்டியே, நடனமாடியே, வாழ்த்துப்பாடி துதிப்போம்…(அவரை)
வாழ்த்துப்பாடி துதிப்போம்…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2
2. (திறவுண்ட வாசலை சிலுவை மரத்தில் தந்தாரே…
பிளவுண்ட கன்மலை நமக்காய், மரித்து உயிர்த்தெழுந்தாரே…) x 2
மனந்திரும்பும் ஒருவரிலும் மனமகிழும் தெய்வம் இயேசு…
கரங்கள் தட்டியே, நடனமாடியே, வாழ்த்துப்பாடி துதிப்போம்…(அவரை)
வாழ்த்துப்பாடி துதிப்போம்…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
ஆராதனை உமக்கே…
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2
3. (சுவிசேஷ வாஞ்சையும், ஆத்தும பாரமும் தந்தாரே…
அபிஷேக மழையில் நனைத்து, என்னை அவர் அழைத்தாரே…) x 2
அறுவடைக்கு ஆட்கள் வேண்டும், அழைக்கிறார் இயேசு இன்று…
அறுப்பு மிகுதியே, அவருக்காகவே நமது வாழ்வை கொடுப்போம்…(இன்றே)
நமது வாழ்வை கொடுப்போம்…
எங்கள் வாழ்க்கையே உமக்கே…
எங்கள் வாழ்க்கையே உமக்கே…
எங்கள் வாழ்க்கையே உமக்கே…
(துதி, ஸ்தோத்திரம் எல்லாமுமே…) x 2
காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்…
வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்…
(மாற்றவே வருகிறார்) x 3.