Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ


1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரே
இரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரே
பாவ பரிகார பலியாகி
ஜீவனைக் கொடுத்தே மீட்டீரே
உம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

2. கிருபாதார பலியாக
அன்பின் வெளிப்பாட்டின் உச்சமாக
ஒரே குமாரனையும் தந்து விட்டீர்
இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர்
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

3.கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

Leave a Comment