Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே-2

என் நல்ல தகப்பனே நேசம் நீரே
கைவிடாதவரே
என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே-2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே-2

மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2
– என் நல்ல தகப்பனே

2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே-2

உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2
– என் நல்ல தகப்பனே

நல்ல தகப்பன் நீரே
கைவிடாத தகப்பன் நீரே-2


Thagappanae Nalla Thagappanae
Um Thayavaal Nadaththidumae
Thagappanae Nalla Thagappanae
En Karaththai Pidithidumae

En Nalla Thagappanae Neasam Neerae
Kaividathavarae
En Paasa Thagappanae Vazhkkai Neerae
Katti Anaippavarae

1.Thaayin Karuvil Uruvaagum Munnamae
Um Kangal Kandatahe
En Elumbugal Uruvaagum Munnamae
Peyar Solli Alaiththeerae

Maranapallathakkil Nadanthapothellam
Unga Kaiyil Yeanthi Thaangi Sumantheerae

2. Ummai Innum Athigamaai Ariya
Um Karangalil Yeanthumae
En Kaiyai Neagilaathu Pidiththu
Nadakka Solli Thaarumae

Um Anbin Aazha Agala Uyaraththai
Kalvaari Anbil Unara Vaiththeerae

Nalla Thagappanae Neerae
Kaividatha Thagappanae Neerae