பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai
பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்
பாருங்கள் பாவையரே.
அனுபல்லவி
காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்
காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர்
சரணங்கள்
- பக்தர் பெருமான் இரு கைத்தலம் விரிக்கிறார்,
 பாவியைப் போல் வாதை மேவி உத்தரிக்கிறார்;
 பெத்தம் உளமனத்தார் கத்திக்கொக் கரிக்கிறார்,
 பேதை மரி தன்மார்பில் மோதி ஆகுலிக்கிறார். – பாதகர்
- கள்ளர், கயவர்பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,
 காடி கலந்தகடற் காளானைத் திணிக்கிறார்;
 வள்ளல் செவியுளைக்கும் வார்த்தைகள் பிணைக்கிறார்,
 மாறுபா டுள்ள ரபி மார்புறக் கணிக்கிறார். – பாதகர்
- கைவிட்ட தெனவென்று கலங்கிநின் றழுகிறார்,
 காயுநின் மலன்கோபத் தீயினில் முழுகிறார்,
 மையுற்ற கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;
 வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார். – பாதகர்
4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,
மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர்

