Puthandu Vazhthukal song lyrics – புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம்
இந்நாளில் தேவனை போற்றுகின்றோம்
வருஷத்தை நன்மையால் நிறைய செய்து
சாட்சியாய் என்றும் நடத்திடுவார்
புத்தாண்டு வாழ்த்துக்கள் (2)
1.புதிய கிருபை நமக்களித்து
புதிய பாதையில் நடத்திடுவார்(2)
புரியாத அறியாத அதிசயத்தை
இப் புது ஆண்டில் நம்மில் நிறைவேற்றுவார்
புத்தாண்டு வாழ்த்துக்கள் (2)
2.அன்பின் தேவன் நம்மை அழைத்து
அழியா இன்பம் தந் திடுவார் (2)
அறியாத வழியில் நம்மை நடத்தும்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
புத்தாண்டு வாழ்த்துக்கள் (2)