Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal
செம்மண்ண விளைய செய்து
கருமண்ண தழைக்க செய்து
புசித்து திருப்தி அடைய செய்தாரே
ஆத்து தண்ணி வத்தினாலும்
சேத்து மேல கால வைக்க
வானத்தையே திறந்து விட்டாரே
எங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சி
தன்னா தன்னா தானே
பயிர் எனக்காக முளைச்சாச்சு
தன்னா தன்னா தானே
சொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாது
ஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா
- களத்துக்குள்ள நம்பிக்கையா கால வைப்போமே
எங்க காளையனும் மிதிக்க தொடங்குவான்
விதையெல்லாம் சந்தோசமா வளர தொடங்குமே
எங்க சனத்தோட வயிறு நிரம்புமே
பால் கொடுக்கிற பசுவும் கூட பைய பைய மிதிக்குதே
நெல்மணிய நெனச்சு பாக்குதே
வானம் பார்த்து நின்னோமே ஆண்டவர பாத்தோமே
அமுக்கி குலுக்கி சரியா செய்தாரே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம
எங்களை பார்த்துக்கொள்வாரு - கண்ணீர் விட்ட காலமெல்லாம் மாறிப்போச்சுது
எங்கள கெம்பீரமா நடக்க செய்தாரே
எங்க அப்பாவ தான் நம்பி இருந்தோம் மனசு மாறல
எங்கள செழிப்பாக மாற்றி விட்டாரே
வண்டி வண்டியா நெல்லு தானே வருகுதய்யா
அரண்மனையா மாற்றிவிட்டாரே
களஞ்சியத்தை பாக்கவே கோடி கண்ணு போதாதே
வீடெங்கும் நெல்லா கிடக்குதே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம எங்களை பார்த்துக்கொள்வாரு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்
உபாகமம் 28:8, எரேமியா 17:7-8, உபாகமம் 28:12, ஆதியாகமம் 27:28
யோவேல் 2:24,25, ஏசாயா 30:23, ஆதியாகமம் 8:22, சங்கீதம் 126:5,
1 நாளாகமம் 16:34