உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney

1.உலகங்கள் உண்டாகுமுன்னே
மூவர் மனதில் நான் தோன்றினேனே
குமாரனில் என்னையும் இணைத்து- நித்திய
உறவே உன் சிருஷ்டி பின் நோக்கம்
முன்அறிந்தீர் வார்த்தை மாம்சமாய் மாற
முன்குறித்தீர் அவதாரமாய் வர (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
எல்லையில்லா அன்பிற்கோர் அல்லேலூயா

  1. ஆதாமின் பாவங்களாலே- ஆதி
    நோக்கங்கள் மாறவே இல்லை
    இடை வந்ததே மீட்பின் சிலுவை
    தடை ஏது வார்த்தை மாம்சமாக
    மாறாதவர் சொன்னதை மாற்றாதவர்- முழு
    மானிடம் மகனிடம் சேர்க்கும் வரை (2)
  2. காரிருள் இறங்கின இயேசு – என்
    வலியையும் பொய்யையும் பிரித்து
    தகப்பனை அங்கேயே கண்டு
    மரணத்தை விழுங்கி ஜெயித்தார்
    புத்திரனே புது சிருஷ்டி நானே
    “அப்பா” அழைக்க அதிகாரம் பெற்றேனே (2)
  3. தலையோடு பொருந்தும் சரீரம்- அதுவரை
    ஓய்வதில்லை உம் உதிரம்
    திருத்துவ தேவனில் மாம்சம்- இணைவதே
    சுவிசேஷத்தின் அம்சம்
    மா விசேஷமே திருத்துவ சுவிசேஷமே
    திரிந்த என் மனதை அன்பில் மயக்குதே (2)
  4. அன்பு, ஜீவன், ஒளியில் மூழ்கி
    மூவரின் முத்தத்தில் நான் நனைந்தேனே
    பூரண பூரிப்பை அடைந்தேன்
    புகலிடம் வேறொன்றும் தேவையே இல்லை
    அப்பாவும் அம்மாவும் அரவணைக்க
    மூத்த அண்ணனின் மார்பினில் நான் சாய்ந்திட்டேன்