Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் மறைந்து போகுதே-அந்த
வார்த்தை மாம்சமானாரே
தோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே

ஒளியான தேவன் வழியாக வந்தார்
இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதே
ஒளியான தேவன் வழியாக வந்தார்
பயமெல்லாம் விலகி ஓடுதே

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் மறைந்து போகுதே
வார்த்தை மாம்சமானாரே
பயமெல்லாம் விலகி ஓடுதே

1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்
பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2
தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட மன்னவன் மனுவாய் பிறந்தாரே -2

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் விலகி ஓடுதே -அந்த
வார்த்தை மாம்சமானாரே
தோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே

  1. மந்திர, தந்திரம் அவர் முன்னே பலிக்காதே
    வியாதியும் வறுமையும் அவர் சமூகம் நிற்காதே -2
    அவர் சொல்ல ஆகுமே அவர் வாக்கு நிற்குமே அவரே (மகிமையின்) இயேசு ராஜா -2

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் விலகி ஓடுதே-அந்த
வார்த்தை மாம்சமானாரே
தோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே

3.⁠ ⁠பொன்னோ, பொருளோ அவர் உன்னிடம் எதுவும் கேட்கவில்லை..
ஆஸ்தியோ அந்தஸ்தோ உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.. – 2
அவரிடம் வருவாயா உள்ளத்தை தருவாயா உன் இதயம் பிறந்திடுவாரே -2

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் விலகி ஓடுதே-அந்த
வார்த்தை மாம்சமானாரே
பாவமெல்லாம் பறந்து போகுதே

ஒளியான தேவன் வழியாக வந்தார்
இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதே
ஒளியான தேவன் வழியாக வந்தார்
பயமெல்லாம் விலகி ஓடுதே

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் விலகி ஓடுதே -அந்த
வார்த்தை மாம்சமானாரே
தோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே