பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

lyrics

பனிமழை பொழியும் இரவு
பாலகன் இயேசு வரவு
தேவன் காட்டியது தயவு
தம் மைந்தனைத் தந்தது ஈவு

வானம் விட்டது அதிசயம்
பூமி வந்தது அதிசயம்
மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது
அதிசயம் அதிசயம்
கொட்டிலில் கோமகன் இயேசு
தென்றல் காற்றே வீசு

தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம்
ஆயர்கள் பணிந்தனர் அதிசயம்
அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது
அதிசயம் அதிசயம்
புதுமை பாலன் இயேசு
பூங்காற்றே நீ வீசு

தேடிவந்தது அதிசயம்
மீட்டுக் கொண்டது அதிசயம்
பாவங்கள் நீக்கி பரிசுத்தம் தந்தது
அதிசயம் அதிசயம்
உள்ளத்தில் வந்தார் இயேசு
இல்லாமல் போனதே மாசு

Leave a Comment