நித்தியா இவ்வாலயத்தில் சேர் – Nithiya Evvaalayaththil Sear
பல்லவி
நித்தியா, இவ் ஆலயத்தில் சேர், ஐயா?- இதில் நேசமாய் வந்தோருக் கருள் கூர், ஐயா
அனுபல்லவி
பெத்த லேம் பதிக் கிறைவா, பேச அரிதான திரு
சத்ய மறை பரவும் சுவாமி ஏசு ராஜன் எனும்
சரணங்கள்
1 துத்திய பரமண்டல வாசனே;-பரி
சுத்தர் செய்யும் தோத்திரத்தில் நேசனே,
பக்தர்கள் இயற்று பவ நாசனே,-இந்தப்
பார் இருள் அகற்றும், பிரகாசனே,
சத்துரு, தசை, உலகம் மெத்தவும் வருத்த நொந்து
கத்தும் அடியார்க்கு உன்தன் சித்தம திரங்க என்றும்
பத்து நெறியும் கடந்து பித்தராய்ப் பிழைத்த எங்கள்
பாவமும் அதால் விளைந்த சாபமும் தொலைக்க வந்த
2.மதி இல்லா எங்களைப் பாராட்டியே,-பொல்லா
மானிடர் பிழைக்க அருள் காட்டியே,
சதிசெய் அலகை வஞ்சம் ஓட்டியே,-உன்தன்
சபைக்குக் கிருபை முடி சூட்டியே,
கதியும் அற இழந்த கடையானோர் உன் பதத்தின்
ததி இதுவாக வந்து தங்குதலால் ஆதரிப்பாய்!
மதியும் பதத்தினில் ‘இரவியும் ‘தாரகைக் கணம்
துதி செய் சிரத்தணிந்த துய்ய சபை போற்றும் தேவே,
3. தந்தை சுதன் ஆவியர்க்குத் தோத்திரம்-அ
னந்த சதா காலங்களும் பாத்திரம்;
விந்தை மறையே நமது ‘நேத்திரம்,- வி
ளங்கும் ஒளியாக வந்த சூத்திரம்;
சொந்தமாய் இந்நாட்டிலுள்ள சுத்த சுவிசேஷ சபை
சொன் மறையின் ஊழியர் எச் சோதனை தனக்கும் தப்பி,
தந்த மறை சத்தியத்தில் தாபரிக்க ஆதரிப்பாய்;
சந்ததம் துதி உமக்கே, ஸ்வாமி! ஏசு ராஜன் எனும்