உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye
உம்மை போலே யாரும் இல்லையே
உங்க அன்பை போலே எதுவும் இல்லையே
உம்மை போலே யாரும் இல்லையே
உங்க அன்பை போலே எதுவும் இல்லையே
பரத்தினில் வேறொரு தேவனில்லை
இந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை
பரத்தினில் வேறொரு தேவனில்லை
இந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை
உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்
தாங்கி பிடித்ததொங்க கிருப
தவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்
தூக்கி எடுத்ததொங்க கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே
கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்
கரம் பிடிப்பதொங்க கிருப
காலம் மாறினாலும் சொந்தம் விலகினாலும்
கூட இருப்பதொங்க கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே
பாவம் நீக்கி என்னை பெலவானாக்கி
பரலோகம் சேர்ப்பதொங்க கிருப
வரங்கள் கொடுத்து என்னை வாரி அணைத்து
உம் பிள்ளையாக்கியது கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே