அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் – அழகாய்

2. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்

Another Version

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் – பொற் தளத்தில்
அழகாய் நிற்கும் யாரிவர்கள்

1. எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்

2.ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர்

3. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

4. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்று கே
அள்ளிப் பருக இயேசு தாமே

5. ஆதிப்பிதாவே, ஆட்டுக்குட்டியே
தூய ஆவியே துதி ஸ்தோத்திரம்
கன மகிமை பெலன் வல்லமை
என்றென்றைக்கும் உம்முடையதே

Leave a Comment