ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

எல்லா நன்மைக்கும் காரணரே
எந்தன் ஜீவனின் ஆதாரமே
எல்லா நன்மைக்கும் காரணரே
எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே

உம்மையே பாடுவேன்
உம்மையே போற்றுவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை உயாத்தியே ஆராதிப்பேன்

சிங்கத்தின் வாயில் சிக்கின ஆட்டை போல்
மறு கணம் தெரியாமல் வாழ்ந்தேன்
சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்
நான் அழிந்து போகாமல் காத்து கொண்டீர்
சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்
நான் பிழைத்து கொள்ள கிருபை செய்தீர்

உம்மையே பாடுவேன்
உம்மையே போற்றுவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை உயாத்தியே ஆராதிப்பேன்

சிற்றின்ப சேற்றில் நான் சிக்கி தவித்தேன்
எழும்ப முடியாமல் வாழ்ந்தேன்
உயரத்தில் இருந்து – உம் கரம் நீட்டி
கன்மலை மேல் என்னை தூக்கி விட்டீர்
உயரத்தில் இருந்து – உம் கரம் நீட்டி
கன்மலை மேல் என்னை தூக்கி விட்டீர்

உம்மையே பாடுவேன்
உம்மையே போற்றுவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை உயாத்தியே ஆராதிப்பேன்

வழி மாறி போனேனோ என்று தவித்தேன்
பாதை தெரியாமல் அலைந்தேன்
தேடி வந்தீர் – கட்டி அணைத்தீர்
சாம்பலை சிங்காரம் ஆக்கி விட்டீர்
வா என்று சொன்னீர் – தூக்கி சுமந்தீர்
என் தலை நிமிர செய்து விட்டீர்

உம்மையே பாடுவேன்
உம்மையே போற்றுவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை உயாத்தியே ஆராதிப்பேன்

எல்லா நன்மைக்கும் காரணரே
எந்தன் ஜீவனின் ஆதாரமே
எல்லா நன்மைக்கும் காரணரே
எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே

உம்மையே பாடுவேன்
உம்மையே போற்றுவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை உயாத்தியே ஆராதிப்பேன்

Leave a Comment