இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
- நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே - உற்றார் மற்றோரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடாதென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபம் கேளுமே - அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே - ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக
ஐங்காயங்கள் ஏற்றீரே
தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத்
தேடும் ஜெபம் கேளுமே - தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே - எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே - சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே
Irangumae En Yesuvae song lyrics in English
Irangumae En Yesuvae
Irakkaththin Aisvariyamae
Koovi Kathariyae Raavum Pagalumae
Kenjum Jebam Kaelumae
- Niththam Emakkaai Parindhu Paesum
Nalliravin Nannbanae – Anbin
Pidhaa Munnil Indru Jebiththidum
Anbar Jebangkaelumae - Utraar Matrorum Kudumbangalum
Matrum Palar Maalvadhai
Kanndu Sagithidaathendrum Jebithidum
Kanneer Jebam Kelume - Andru Ninivae Alivai Kanndae
Anbae Irangineerae – Yonaa
Uraiththa Tham Aalosanai Thandhu
Yezhai Jebangkelumae - Aindhu Kanndathin Janathirkaaga
Iynkaayangal Yaetreere
Devan Illai Endru Koori Madivorai
Thedum Jebam Kelume - Thaarum Uyir Meetchi Sabaithanil
Sorum Ullam Meelavae
Karththaavae Um Janam Seththa Nilai Maara
Bhakthar Jebankaelumae - Eththanai Thunbam Sagiththu Meetteer
Ellaamae Veennaagumo
Aththi Maraththirku Andru Irangineer
Andha Jebangkelumae - Sodhanaiyinindru Ratchiththeerae
Sodhomin Bhakthanaiyae
Aabiragaam Andru Vaeenndi Jebiththadhor
Aadhi Jebangkelumae
Sister Sarah Navaroji
R- Waltz T -145 D 3/4