KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

LYRICS

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் — கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் —
கர்த்தர்

Leave a Comment