Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics – கர்த்தர் துயர் தொனியாய்
கர்த்தர் துயர் தொனியாய்
கதறிமுகம் கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்
- மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் - துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந் தனிமையிலே - பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் - திறந்த கெத்செமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடுனும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவே - பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கின்றதே
பெருமூச்சுடன் ஜெபிக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன் - இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன்
Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics in English
Karthar Thuyar Thoniyaai
Kathari Mugam Kavilnthae
Irul Soolntha Thottathilae
Idhayam Norungi Jevithaar
1.Maranaththin Viyagulamo
Manithar Thunai Illaiyo
Deva thoothan theattridavae
Tharunam nerunga oppadaithaar
Thunba sumai sumanthaar
2.Thukkathaal tham sheesharkalai
Thalai saaithu Thoonginarae
Thammai moovar Kaividavae
Thooramaai kadanthae thigiladainthaar
Thnnam thanimaiyilae
3.Pithavin ippathiraththin
Panginai naan yeattru Kondean
Aagattum umathu siththam
Athu neengidumo Entruraithaar
Aa Raththa Vearvaiyudan
4.Thirantha gethsameanaiyil
Thunainthu Vantha pagaigan
Enna thurogam seithidinum
Enthan snekithanae Entralaithaar
Enna Maa Anbithuvae
5.Paraman Jeba saththamae
Poongavinil keatkintrathae
Perumoochudan jebikkum
Avarodinainthae Kanneerudan
Aaviyilae Jebippean
6.Yesu Thaangina Thunbangal
Ennai thaandiyae Sellathae
Enakkum Athil pungundae
Siluvai marana paadukalaal
Seeyonil searnthiduvean
Sis.சாராள் நவரோஜி
R-16 Beat T-100 Cm 4/4