Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்
இயேசு ராஜானே
நன்மை செய்த உம்மை பாடுகிறேன்
தேடும் நேசரே (2)

மனம் தேம்பி தேம்பி தேடுதே
உண்மை அன்பையே
அதை மீண்டும் மீண்டும் காணாவே
உந்தன் அனைப்பிலே – ( நன்றி )

1. தேடினேன் வாடினேன்
அன்பிற்காக ஏங்கினேன்
தாகமாய் ஒடினேன்
கானல் நீராய் போனதே
பாசமாய் நேசமாய்
என்னை தேடும் மேய்ப்பனாய்
தேடியே தேடியே
என்னை கண்ட நேசமே
நேச இயேசுவே
உமதன்பைப்போலவே
தாகம் தீர்க்குமா
இந்த மாய உலகமே – ( நன்றி )

2. ஆறுதல் வேண்டியே
உறவுக்காக நாடினேன்
ஆசையாய் தேடினேன்
யாவும் மாறிப்போனதே
பாசமாய் தோன்றிய
வாழ்வும் சாயம் போனதே
வாழ்வதும் ஏன் என்று
தூன்டும் உணர்வு வாட்டுதே
பாரம் தாங்கியே
புது வாழ்வை காட்டினீர்
வேத நாயகா
உம் பாதம் சரணமே – ( நன்றி ).

Leave a Comment