Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Lyrics:
சிலுவை மரத்தண்டை வந்தேன்
சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்
சத்தியம் உரைத்திட்ட சாந்தமே
நித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்
சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே!

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்
கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்
சொல்லொணாத் துயரத்தோடழுதீர்
சொல்லியும் கேளாமல் போனேன்!

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்
தூசிக்கப்பட்டதே உம் நாமம்
சோர்வால் துவண்ட தேகம்
சாய்ந்ததே பலமுறை என்னால்

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

உம்மையே தந்திட்ட பின்னும் – நான்
தூய்மையை இழந்ததால் – உம்மை
ஈட்டியால் குத்தத் துணிந்தேன்
துக்கத்தால் கதறினீர் “தாகம் “

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

Meetpin oli|Good Friday Tamil Songs

Leave a Comment