Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்
பல்லவி:
தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!
தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!
உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2
உமக்காக! உள்ளம் ஏங்குதே!
சரணம் I
தாயின் கருவில்! என்னை அறிந்தீரே!
பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!
உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!
தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!
என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!
உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே!
சரணம் II
தனிமையில்! நித்தம் வாடினேன்!
நிம்மதியை! எங்கும் தேடி அலைந்தேன்!
உந்தன் அழைப்பிற்காகவே! கண்கள் ஏங்கி நின்றதே!
எந்தன் கண்ணீரை! நீரோ! கண்டுகொண்டீரே!
உந்தன் மார்பில்! தலைசாய! என்னை ஏற்பாய் ஏசுவே!
தாயைபோல! என்னை சுமந்து! என்னை தேற்றும் தெய்வமே!
சரணம் III
எந்தன் பாவம் !உம்மை கொன்றதே!
சாப! குற்றங்களை! சுமந்துகொண்டீரே!
எந்தன் மீட்புக்க்காகவே! நீரோ இரத்தம் சிந்தினீர்!
உயிர்த்தெழுந்து என்னை! நீரோ! மீட்டுக்கொண்டீரே!
எந்தன் உயிரே! நீர்தானே! நீர் என்னில் வாருமே!
உமக்காக! என்னை தந்தேன்! என்னை ஏற்பாய் ஏசுவே ! (Repeat பல்லவி)