Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல
இயேசுவே உந்தன் பெயர் சொல்ல ஆசை
எனக்குள்ளே என்றும் நீர் வர ஆசை
உம்மையே எண்ணி வாழ்கிறேன்
உண்மையாய் உள்ளம் ஏங்குதே…..
உம் பேரைச் சொன்னால் கல்மனமும் கரையும்
உம் செயலை நினைத்தால் உள்ளுணர்வும் இனிக்கும்
உம் உள்ளங்கையில் எனை வரைந்து காக்கிறீர்
தீங்குகள் நெருங்காமல் எனைச்சூழ நிற்கிறீர்
நான் குழியில் விழுந்தாலும் தூக்குகிறீர்
தவறி விழுந்தாலும் தாங்குகிறீர்…
உம் நேசத்தாலே
தொலைந்த என்னைத் தேடிவந்தீர்
தோழில் தூக்கி சுமந்தீர்
உம் அன்பில் (நான்) உயிர் வாழ்கிறேன் -2
ஒரு வார்த்தை நீர் சொன்னால் ஓடோடி வருவேன்
ஒரு பார்வை நீர் பார்த்தால் பாதத்தைப் பிடிப்பேன்
இனி எழும்பமாட்டேன் என நினைத்தவர் முன்னே
எனைப் புரிந்துகொண்டு என் தலை உயர்த்தி மகிழ்ந்தீர்
இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
உம் பிள்ளை என்று சொன்னீரே…
உம் மடியில் சாய்வேன்.
தொலைந்த என்னைத் தேடிவந்தீர்
தோழில் தூக்கி சுமந்தீர்
உம் அன்பில் (நான்) உயிர் வாழ்கிறேன். -2