நம்பவேண்டாம் உலகை – Nambaveandam Ulagai

நம்பவேண்டாம் உலகை – Nambaveandam Ulagai

பல்லவி

நம்பவேண்டாம், உலகை நம்ப வேண்டாம்.

அனுபல்லவி

நம்பவேண்டாம்; இவ்வுலகம் யாவும் விழல் என்று சாலமோன்
செம்மையாய் அறிந்துரைத்தான்; இம்மையில் உழன்றுழன்று-நம்ப

சரணங்கள்

1.மன்னர் மகுடரும் பால
சின்னவரும் ஓர் நிமிஷம்
தன்னிலே அழிவதல்லால்,
பின்வழக்கே தொன்றுமில்லை.

2.²காயத்தைப் பிரிந் துன்னுயிர்
ஏகி, ஒரு நாள் இருந்தால்,
நேய சுற்றம், மக்கள், பெண்டிர்
மாயமாய் அகன்று நிற்பார்.

3.பிள்ளை இடுகாடு மட்டும்,
பெண் கொடியாள் வாசல் மட்டும்
தெள்ளிய அன்பர் பொருள் கைக்
குள்ள நாளளவு மட்டும்;

4.ஆசையாய்க் கருத்தில் உந்தன்
யேசுவைப் பதித்து நிதம்
ஓசையாய் ஜெபித்து வந்தால்
மோசம் இல்லை ; வேறெதையும்

Nambaveandam Ulagai song lyrics in english

Nambaveandam Ulagai Ulagai Namba Veandaam

Nambaveandaam Evvulagam Yaavum Vizhil Entru Saalamon
Semmaiyaai Arinthuraithaan Emmaiyil Ulantrulantru Namba

1.Mannar Magudarum Paala
Sinnavarum Oor Nimisham
Thannilae Alivathallaal
Pinvalakkae Thontrumillai

2.Sahayaththai Pirnthunnyir
Yeahi Ooru Naal Irunthaal
Neaya Suttram Makkal Pendeer
Maaymaai Agantru Nirpaar

3.Pillai Edukaadu Mattrum
Pen Koadiyaal Vaasal Mattum
Thelliya Anbar Porul Kai
Kulla Naalalavu Mattum

4.Aasaiyaai karuththil Unthan
Ysuvai Pathithu Nitham
Oosaiyaai Jebithu Vanthaal
Mosam Illai Vearaethaiyum